புதன், 29 டிசம்பர், 2021

உளுந்தங்களி

 தேவையான பொருட்கள்:


‌ 250 கிராம் அளவு உளுந்து
‌  50 கிராம் அளவு  பச்சரிசி
 ‌‌50 கிராம் அளவு கடலைப்பருப்பு
‌ 300 கிராம் அளவு வெல்லம்
‌ 250 கிராம் அளவு நல்லெண்ணெய்

செய்முறை:
உளுந்து, பச்சரிசி, கடலைப்பருப்பு  மூன்றும் சுத்தம் செய்து 1 மணி நேரம் நன்றாக ஊற வைத்த பின் ஒன்றும் பாதியாக (ஓரளவுக்கு) அரைத்து கொள்ளவேண்டும் பின் அரைத்த மாவில் வெல்லத்தை நன்றாக கரைத்து கொள்ளவும் ( தண்ணீர் குறைவாக விட்டு அரைக்கவும் தோசை மாவின் பதத்திற்கு இருந்தால் போதுமானது ).
    ஒரு கனமான பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு மிதமான சூட்டில் வந்ததும் சிறிய தீயில் வைத்து கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி கை விடாமல் கிளறவும், நன்றாக திக்னேஸ் ஆனதும் இறக்குவதற்கு முன்பு (தேவைப்பட்டால்) 3 டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கிளறி இறக்கலாம்.
இறக்கிய இந்த களியை ஒரு இரவு விட்டு மறு நாளிலிருந்துதான் சாப்பிட வேண்டும்.
சாப்பிடும்போது தேங்காயை துருவி போட்டும் சாப்பிடலாம்.