புதன், 21 டிசம்பர், 2022

குடைமிளகாய் பொறியல்

 

தேவையான பொருட்கள்:

1----குடைமிளகாய் - கால் கிலோ

2----கேரட் துருவல் -1 cup

3----தேங்காய் துருவல் - 1 cup

4----எண்ணெய்

5----கடுகு 

6----உளுத்தம்பருப்பு - 2 tsp 

7----கடலைப்பருப்பு - 2 tsp 

8----பச்சைமிளகாய் காரத்திக்குகேற்ப்ப 

9----உப்பு தேவையான அளவுஅளவு


செய்முறை: 

குடைமிளகாய் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்,

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் சேர்த்து பொறிந்ததும், நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி சிறு தீயில் வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேக விடவும். 

குடைமிளகாய் வெந்த பிறகு அதில் துருவிய தேங்காய் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து கிளறி இறக்கவும்.

 சுலபமான மற்றும் ஆரோக்கியமான குடைமிளகாய் பொறியல் பரிமாற தயார்.


செவ்வாய், 20 டிசம்பர், 2022

தக்காளி ரசம்

 

தேவையான பொருட்கள்: 

1----- பெரிய தக்காளி - 3

2----- தேங்காய்ப் பத்தை - 2

3----- புளி சிறதளவு 

4----- எண்ணெய்

5----- கடுகு 

6----- உளுத்தம்பருப்பு 

7----- பெருங்காயம் 

8----- கருவேப்பிலை

9----- மிளகாய்-4

10----- மிளகு 

11----- பூண்டு

12----- சீரகம்

13----- உப்பு தேவையான அளவு


செய்முறை: 

மிளகு, பாதி பூண்டு, பாதி சீரகம், மிளகாய் - 2, ஆகியவற்றை சிறிது வறுத்து எடுத்து கொள்ளவும் அதனுடன் தேங்காய்ப் பத்தை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.

எடுத்த பின் அதில் தக்காளியை நன்கு பிசைந்து விட வேண்டும்.

அரைத்து வைத்திருந்தவற்றை இதில் கொட்டி கலந்து விடவும்.

பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, மிளகாய் - 2, மீதமுள்ள பூண்டு, மீதமுள்ள சீரகம் ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு தாளிக்க வேண்டும்.

ஒவ்வொன்றும் போட்டு வெடித்ததும் கரைத்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூட வேண்டும்.

கொதி வருவதற்க்கு முன்பு சுற்றிலும் நுறை போல் இருக்கும் நிலையில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

செவ்வாய், 13 டிசம்பர், 2022

சிக்கன் அடை

தேவையான பொருட்கள்:

1----- சிக்கன் 250 கிராம்

2----- அடை மாவு 500 கிராம்

3----- மஞ்சள்தூள் 1/2 tsp

4----- மிளகுத்தூள் 1/2 tsp

5----- வெங்காயம் - 2

6----- பூண்டு 10பல் சிறிதாக நருக்கியது

7----- இஞ்சி மற்றும் தயிர் சிறிதளவு

8----- பச்சைமிளகாய் தேவைக்கேற்ப 

9----- உப்பு தேவையான அளவு


செய்முறை:

               கோழிக் கறியை எலும்பு இல்லாமல் சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்,

                அதில் உப்பு, மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து சிறிது தயிர் ஊற்றி குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும், 

                  பின் அடை மாவை தண்ணீரில் கலந்து அதில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் போட்டு 

                   அதனுடன் ஊறவைத்திருந்த கோழிக்கறியையும் கலக்க வேண்டும், 

                   அதன் பிறகு தோசை கல்லில் ஊத்தாப்பம் போன்று ஊற்றி அதை சுற்றி எண்ணெய் விட்டு சுட்டு எடுக்க வேண்டும்,

                சுவையான சிக்கன் அடை தயார்.


திங்கள், 12 டிசம்பர், 2022

மட்டன் கிரேவி


தேவையான பொருட்கள்:

1-----   மட்டன் 500கிராம்

2-----   எண்ணெய் -100 ml

3-----   கடுகு

4-----   கருவேப்பிலை

5-----   வெங்காயம் - 50கிராம்

6-----   பச்சை மிளகாய் -5

7-----   மல்லித்தூள் -3 tsp

8-----   சீரகத்தூள் -3 tsp

9-----   மிளகாய்த்தூள் - 3tsp

10----- மிளகுத்தூள் -3tsp

11----- மஞ்சள்தூள் - 1 1/2 tsp

12----- இஞ்சி, பூண்டு விழுது

13----- கொத்தமல்லி இலை 

14----- உப்பு தேவையான அளவு

15----- தண்ணீர் தேவையான அளவு


செய்முறை :

                  மட்டனை சுத்தம் செய்த பின் குக்கரில் போட்டு அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்,சீரகத்தூள்,மல்லித்தூள் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி நன்றாக வேக வைக்க வேண்டும்.

                  மட்டன் நன்கு வெந்த பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு பொரிந்ததும் கருவேப்பிலை போடவும்,

                   அடுத்து வேக வைத்திருந்த மட்டனை போட்டு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்,

                    இஞ்சி பூண்டு விழுதின் நிறம் சிறிது மாறும்போது வெங்காயம் பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி மூடி சிறு தீயில் சிறிது நேரம் வேகவிடவும்,

                      பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்,

                      இறக்குவதற்க்கு முன் மிளகுத்தூள் சேர்க்க வேண்டும்,

                      தண்ணீர் வற்றி எண்ணெய் மேலே தெளிவும் வந்த பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம்,

                      மட்டன் கிரேவி தயார்.



சனி, 10 டிசம்பர், 2022

கோழிக் கறிக் குழம்பு

 தேவையான பொருட்கள்:

1----- கோழிக் கறி 1/2 கிலோ

2-----  மிளகாய்த்தூள் 50 கிராம்

3-----  மல்லித்தூள் 2 கரண்டி மிளகுத்தூள் 1/2 கரண்டி 

4-----  சீரகத்தூள் 2 கரண்டி 

5-----  நல்லெண்ணெய் 100 கிராம்

6-----  வெங்காயம் 50 கிராம்

7-----  தேங்காய்ப் பால் அரை மூடி 

8-----  மஞ்சள்தூள் சிறிதளவு

9-----  கொத்தமல்லி இலை சிறிது 

10-----  தண்ணீர் உங்கள் தேவைக்கேற்ப்ப 

11-----  உப்பு தேவையான அளவு

செய்முறை :

                  🕐 கோழிக் கறியை சுத்தம் செய்து சிறிய துண்டாக வெட்டி கொள்ள வேண்டும். 

                  🕑கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி அதனுடன் கோழிக்கறியையும் சேர்த்து வதக்கிக்கொள்ள வேண்டும்.

                  🕒இதில் சிறிதளவு மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது கிளறி மூடி வைத்து சிறு தீயில் சிறிது நேரம் வேகவிடவும். 

                   🕓பின் திறந்து கறியில் தண்ணீர் விட்டு வேகவைத்துக் கொள்ளவும். 

                   🕔பின் மிளகாய்த்தூள் மற்றும் மல்லித்தூள் சேர்த்து கிளரி தேங்காய்ப் பாலையும் கறியிலேயே ஊற்றி அதனுடன் சிறிது எண்ணெய் விட்டு வேக வைக்கவும். 

                     🕕கறிவெந்து குழம்பு வற்றி மேலே எண்ணெய் தெளியவும் வந்த பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம். 


வெள்ளி, 9 டிசம்பர், 2022

மஞ்சள் பூசணி (பரங்கிக்காய்) சூப்

 தேவையான பொருட்கள்:

1----- பரங்கிக்காய் - 1 கப் ( சதுரங்களாகவும் சின்ன சின்னதாக நருகியது )

2----- சின்ன வெங்காயம் - 2 ( நறுகியது )

3----- வெங்காயத் தாள் - 1 கட்டு

4----- கேரட் - 1 ( சிறிதாக நறுக்கியது )

5----- வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

6----- கருப்பு மிளகு - தேவையான அளவு

7----- தண்ணீர் - தேவையான அளவு

8----- உப்பு - தேவைக்கு ஏற்ப.


செய்முறை :

                         கடாயை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வெண்ணெயையும், நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கி கொள்ளவும்

                        அதில் பரங்கிக்காய், கேரட் சேர்த்து வதக்கவும், 

                  வெங்காயத்தாளை சிறிது மட்டும் தனியே எடுத்து வைத்து கொண்டு மீதமுள்ள அனைத்து வெங்காயத் தாள்களையும் சேர்த்து வத்கவும்,                  

                      இதனுடன் தேவைக்கேற்ப தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும் 

                      பின் ஆர வைத்து நன்கு மசித்து கொள்ளவும், 

                      சாப்பிடுவதற்க்கு முன்பாக சூடுபடுத்திக்கொண்டு அதில் வெங்காயத்தாள் மற்றும் சிறிது மிளகு சேர்த்து சாப்பிடலாம்.

புதன், 7 டிசம்பர், 2022

துவரம் பருப்பு சட்னி

 தேவையான பொருட்கள் :

@_ துவரம் பருப்பு - 150 கிராம்

@_ வர மிளகாய் - 10 

@_ தேங்காய் - 2 பத்தை

@_ சின்ன வெங்காயம் - 100கிராம்

@_ பூண்டு - 10 பல்

@_ புளி சின்ன எலுமிச்சை பழம் அளவு

@_ பெரிய தக்காளி - 1

@_ தேவையான அளவு உப்பு.


செய்முறை : 

1 st -------- துவரம் பருப்பு, வர மிளகாய் இரண்டையும் எண்ணெய் விட்டு வறுத்து எடுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும்,

2 nd -------- வெங்காயம், பூண்டு, தக்காளி ஆகியவற்றை வறுத்து எடுத்து கொள்ள வேண்டும், 

3 rd -------- அனைத்தையும் நன்கு ஆர வைத்த பின் புளி, தேங்காய்-யும் தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்கு அரைத்துகொள்ளவும்.

4 th -------- சுவையான ஆரோக்கியமான துவரம் பருப்பு சட்னி பரிமாற தயார்.



சனி, 9 ஜூலை, 2022

பாகற்காய் பொரியல்

 தேவையான பொருட்கள் :

பெரிய பாகற்காய் - 5

வெங்காயம் -2 நறுக்கியது

பச்சை மிளகாய் அல்லது வரமிளகாய்  - 3 நறுக்கியது

மஞ்சள் தூள் - 1/2 tsp

கடுகு - 1/2 tsp

உளுந்து - 1/2 tsp

துருவியதேங்காய் 2 பத்தை அளவு 

எண்ணெய் தேவையான அளவு

உப்பு தேவையான அளவு


குறிப்பு:

பாகற்காயை சுத்தமாக கழுவி வடிகட்டிய பின் உள்ளிருக்கும் விதைகளை எல்லாம் நீக்கிவிட்டு சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும்.

நறுக்கிய பிறகு பாகற்காயை தண்ணீரில் போடக்கூடாது. 


செய் முறை : 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து போடவும் வெடித்து முடித்த உடனே வெங்காயம் மிளகாய் பாகற்காய் சேர்த்து கிளறவும் சிறிது வெந்ததும் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து தீ குறைவாக வைத்து கிளறி மூடி வேகவைக்கவும். பாகற்காய் நன்கு வெந்தவுடன் துருவிய தேங்காயை சேர்த்து கிளறி இறக்கவும். சூடான பாகற்காய் பொரியல் ரெடி...

வெள்ளி, 22 ஏப்ரல், 2022

வாழைத் தண்டு சூப்

 தேவையான பொருட்கள் : 


வாழைத் தண்டு - 1 கப் நறுக்கியது

பாசி பருப்பு - 1 tsp

சீரகம் - 2 tsp 

பிரிஞ்சி இலை - 1

கொத்தமல்லி இலை

மிளகு தூள் - உங்கள் தேவைக்கு ஏற்ப

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை : 


ஒரு குக்கர் பத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், பிரிஞ்சி இலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்,

 நன்கு வதங்கிய வெங்காயம் நிறம் மாறியதும் அதனுடன் நறுக்கிய வாழைத்தண்டை சேர்த்து சிறிது வதக்கி,

பின் அதனுடன் பாசிப் பருப்பை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி,

மூடி 3 விசில் வரும் வரை வேக விடவும் பின் குக்கரில் இருக்கும் pressure - ரை வெளியேற்றிவிட்டு மூடியை திறந்து,

அதில் தேவையான அளவு உப்பு மற்றும் உங்கள் காரத்திற்க்கு ஏற்றவாறு மிளகுத் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் அப்படியே கொதிக்க விடவும். 

இரண்டு நிமிடத்திற்க்கு பிறகு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். 

வாழைத் தண்டு சூப் தயார். 

சூடாக பரிமாறவும்.

புதன், 20 ஏப்ரல், 2022

முருங்கைக் கீரை சூப்

 

தேவையான பொருட்கள் :

முருங்கைக் கீரை - 4 கப்

தக்காளி - 1 நறுக்கியது

சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது

இஞ்சி -  1 tsp துருவியது

பூண்டு - 5 பெரிய பல் துருவியது

சீரகம் - 1/2 tsp

கருவேப்பிலை

கொத்தமல்லி இலை

எண்ணெய் - 1 tsp

தண்ணீர் - தேவையான அளவு

மிளகு - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு


செய்முறை :

 ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அதில் சீரகம், கறிவேப்பிலை, துருவிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும், 

பின் சின்ன வெங்காயம் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும், 

அதன் பிறகு தக்காளி சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு மசியும் அளவுக்கு வதங்கிய பின் அதில் முருங்கைக் கீரையை சேர்த்து ஐந்து முதல் ஆறு நிமிடம் வதக்கி

பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 5 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு உப்பு மற்றும் உங்கள் காரத்திக்கு ஏற்றவாறு மிளகு சேர்த்து கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கவும். 

முருங்கைக் கீரை சூப் பரிமாற தயார்.

நண்டு சூப்

 தேவையான பொருட்கள் :


  1. பெரிய நண்டு - 3
  2. சின்ன வெங்காயம் - 10
  3. இஞ்சி சிறிதளவு
  4. பூண்டு - 7 பல்
  5. மஞ்சள் தூள் - 1 tsp
  6. முட்டை - 2
  7. சோளம் - 1 டின்
  8. சோள மாவு - 1 tsp
  9. கொத்தமல்லி இலை
  10. மிளகுத் தூள் உங்கள் தேவைக்கு ஏற்ப
  11. உப்பு - தேவையான அளவு
  12. தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :


👌சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்கு இடித்துக் கொள்ளவும்.

👌நண்டின் ஓட்டை எடுத்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

👌பின் ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.

👌வெந்த நண்டின் சதை பகுதியை வேறு பத்திரத்தில் உதிர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

👌பின் நண்டு கறியில் 1 litter தண்ணீர் சேர்த்து அதில் இடித்து வைத்துள்ள அனைத்தையும் சேர்த்த பிறகு அதில் சோளம், சோள மாவு, கொத்தமல்லி இலை, மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

👌நன்கு கொதித்த பிறகு அதில் முட்டையின் மஞ்சள் கருவை அடித்து ஊற்றி சிறிது கெட்டியாகும் வரை கலக்க வேண்டும்.

👌அதன் பின் முட்டையின் வெள்ளைக் கருவையும் சேர்த்து சிறிது நேரம் கலக்கி, அடுப்பில் இருந்து இறக்கவும்.

👉நண்டு சூப் தயாரானது, சூடாக பரிமாறலாம்.

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

ஆட்டுக் கால் சூப்

தேவையான பொருட்கள் :

  • 👉 ஆட்டுக்கால் - 4 நன்றாக சுத்தம் செய்தது
  • 👉 மஞ்சள் தூள் - 2 tsp
  • 👉 சீரகம் - 1/2 tsp
  • 👉 கறிவேப்பிலை
  • 👉 கொத்தமல்லி இலை
  • 👉 பூண்டு - 15 தட்டியது
  • 👉 இஞ்சி சிறிது தட்டியது
  • 👉 சின்ன வெங்காயம் - 25
  • 👉 வர மிளகாய் - 3 அல்லது பச்சை மிளகாய் - 2
  • 👉 எண்ணெய் - 4 tsp
  • 👉 மிளகு தூள் - தேவையான அளவு
  • 👉 உப்பு - தேவையான அளவு
  • 👉 தண்ணீர் - தேவையான அளவு


செய்முறை :


சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும். 

பின் அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை, ஆட்டுக் கால், மஞ்சள் தூள், சிறதளவு உப்பு மற்றும் தட்டி வைத்துள்ளவை அனைத்தும் சேர்த்து சிறிளவு கிளறி ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஐந்து முதல் ஆறு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 40 - 45 நிமிடம் வேக விடவும்.

 Pressure குறைந்த பின் மூடியை திறந்து அதில், உங்கள் காரத்திற்க்கு ஏற்றவாறு மிளகுத் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும். 

சூடான ஆட்டுக்கால் சூப் பரிமாற தயார்.

வெள்ளி, 8 ஏப்ரல், 2022

Chicken Broth And Gravy Recipe

Required Things :


   💫 Ginger Garlic Paste - 2 tsp

   💫 Coriander - 2 bunch

   💫 Mint - 10 bunch

   💫 Red chilli powder - 25 grams

   💫 Onions - 2 chopped

   💫 Tomato - 2 chopped

   💫 The required amount of salt and

             water

   💫 Yoghurt - small pocket

   💫 Chicken - 500 Grams

   💫  4 - Cashew

   💫  1/2 lid coconut

   💫  1/2 tsp anise

    💫 Biryani leaf - 2

    💫 Annachchi Poo - 1

    💫 Cinnamon - 3

    💫 Cardamom - 2

    💫 Oil - 50 Grams


Recipe

🌟 
Clean the chicken, put it in a cooker, add curd, ginger garlic paste, red chilli powder, coriander, mint, onion, tomato, required amount of salt, 1 cup water, cover and let it simmer for 2 whistles.

🌟 
Can be opened after releasing pressure on the pressure cooker.

🌟 
Finely grind the coconut, cashews and anise.

🌟 
Leave a pit spoon of oil in the pot When hot Biryani leaf - 2, Cardamom - 2, Annachchi Poo - 1, Cinnamon - 3 Add and fry.
🌟 
When the color changes slightly, remove the pressure from the cooker then Add this broth and stir.
🌟
then grinded coconut, cashews and anise Add to the broth and stir, covered and let boil well.
 🌟
If you need broth, add the required amount of water and bring to a boil.

🌟
If you needed gravy, The water already added is sufficient.

🌟
When the thickness you need arrives
Sprinkle with coriander leaves and serve 😋😋😋.