தேவையான பொருட்கள்:
1----குடைமிளகாய் - கால் கிலோ
2----கேரட் துருவல் -1 cup
3----தேங்காய் துருவல் - 1 cup
4----எண்ணெய்
5----கடுகு
6----உளுத்தம்பருப்பு - 2 tsp
7----கடலைப்பருப்பு - 2 tsp
8----பச்சைமிளகாய் காரத்திக்குகேற்ப்ப
9----உப்பு தேவையான அளவுஅளவு
செய்முறை:
குடைமிளகாய் பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்,
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைமிளகாய் சேர்த்து பொறிந்ததும், நறுக்கி வைத்துள்ள குடைமிளகாயை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி சிறு தீயில் வைத்து இரண்டு முதல் மூன்று நிமிடங்கள் வேக விடவும்.
குடைமிளகாய் வெந்த பிறகு அதில் துருவிய தேங்காய் மற்றும் துருவிய கேரட்டை சேர்த்து கிளறி இறக்கவும்.
சுலபமான மற்றும் ஆரோக்கியமான குடைமிளகாய் பொறியல் பரிமாற தயார்.