திங்கள், 24 ஜனவரி, 2022

சிக்கன் குழம்பு மற்றும் தொக்கு

 தேவையான பொருட்கள் :


👉  இஞ்சி பூண்டு விழுது - 2 tsp

👉   கொத்தமல்லி - 2 கொத்து

👉   புதினா - 10 கொத்து

👉  வரமிளகாய் தூள் - 25 கிராம்

👉  வெங்காயம் - 2 வெட்டியது

👉   தக்காளி -2 வெட்டியது

👉   உப்பு மற்றும் தண்ணீர் தேவையான               அளவு

👉   தயிர் -  சின்ன pocket

👉   சிக்கன் - 500 கிராம்

👉   4 - முந்திரி

👉   1/2 மூடி தேங்காய்

👉   1/2 tsp சோம்பு

👉   பிரியாணி இலை - 2

👉   அண்ணாச்சி பூ - 1

👉   லவங்கம் - 3

👉   பட்டை சின்னது - 2

👉   ஏலக்காய் - 2

👉   எண்ணெய் - 50 கிராம்


செய்முறை : 


🌟  சிக்கன் க்ளீன் செய்துவிட்டு அதை குக்கரில் போட்டு தயிர், இஞ்சி பூண்டு பேஸ்ட், வரமிளகாய் தூள், கொத்தமல்லி, புதினா, வெங்காயம், தக்காளி தேவையான அளவு உப்பு 1 டம்ளர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வந்ததும் இறக்கிவிட வேண்டும்.


🌟  Pressure வெளி ஏறிய பிறகு open செய்யலாம்.


🌟  தேங்காய், முந்திரி, சோம்பு மூன்றையும் நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.


🌟  ஒரு பாத்திரத்தில் ஒரு குழி கரண்டி எண்ணெய் விட்டு சூடானதும் பிரியாணி இலை, பட்டை, ஏலக்காய், அண்ணாச்சி பூ, லவங்கம் சேர்த்து வதக்கவும்.

🌟  நிறம் சிறிது மாறியதும் குக்கரில் இருக்கும் pressure - ரை வெளியேற்றிவிட்டு குக்கரில் உள்ள குழம்பை இதில் சேர்த்து கிளறிவும்.

🌟  பின் அரைத்து வைத்திருந்த தேங்காய், முந்திரி, சோம்பையும் இதில் சேர்த்து கிளறி மூடி நன்றாக கொதிக்க விடவும்.

 🌟  உங்களுக்கு குழம்பு போல் தேவைப்பட்டால், தேவைப்படும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.


🌟  தொக்கு போல் தேவைப்பட்டால் ஆல்ரெடி சேர்த்த தண்ணீரே போதுமானது.


🌟  உங்களுக்கு தேவையான திக்னஸ் பதத்திற்கு வந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம்.

சனி, 22 ஜனவரி, 2022

இட்லி , தோசை மாவு சரியான பதத்தில் அரைப்பது

 தேவையான பொருட்கள் : 


👉 1 கிலோ பச்சரிசி

👉 1 கிலோ புழுங்கல் அரிசி

👉 1/2 கிலோ உளுந்து

👉 1/2 tsp வெந்தயம்

👉 உப்பு தேவையான அளவு


செய்முறை : 

💧  பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து மூன்றும் சுத்தம் செய்து (கழுவி) குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து பின் வடிகட்டி அரைக்க வேண்டும்.

💧  அரைக்கும்போது வெந்தயம் மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது. 

💧 அரிசி அரைத்து எடுப்பதற்க்கு முன்பாக கையில் தொட்டு பார்க்கும்போது (ரவையை அரைத்தால் சிறிதாகி இருக்கும் அளவில் மாவின் பதம் இருக்க வேண்டும்) 

💧 அரிசி அரைத்து முடித்ததும் உளுந்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

💧 பின் ஒரே பாத்திரத்தில் அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஊற்றி மிக்ஸ் செய்து வைக்க வேண்டும். 

💧 இந்த மாவு நான்கு முதல் ஆறு மணி நேரத்திர்க்கு பிறகு பயன்படுத்த  தயாரானது.

💧 வீட்டிற்க்கு பயன்படுத்தும் மாவு என்றால் அரைக்கும் போது உப்பு சேர்த்து அரைக்க கூடாது. நீங்கள் மாவை பயன்படுத்தும் போது தேவையான அளவு உப்பு சேர்த்தால் போதுமானது. 

💧 கடைகளில், ஹோட்டல், ஹாஸ்டல் போன்று வியாபாரத்திற்க்கு பயன்படுத்தும் மாவாக இருந்தால் அரைக்கும் போதே உப்பு சேர்த்து அரைத்து 5 மணி நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.


குறிப்பு : மாவில் உப்பு சேர்த்தால் சீக்கிரத்தில் உப்பி புளித்துவிடும்.



வெள்ளி, 7 ஜனவரி, 2022

காளான் Gravy

 தேவையான பொருட்கள் : 


#👌 1 cup காளான்

#👌 3 வெங்காயம் நறுக்கியது

#👌 2 தக்காளி நருகியது

#👌 கருவேப்பிலை

#👌 2 சின்ன பட்டை

#👌 2 கிராம்பு 

#👌 1 ஏலக்காய்

#👌 சின்ன துண்டு இஞ்சி

#👌 6 பல் பூண்டு

#👌 6 சின்ன வெங்காயம்

#👌 4 வரமிளகாய்

#👌 2 tsp மல்லித்தூள்

#👌 1/2 tsp மஞ்சள் தூள்

#👌 1 tsp மிளகு

#👌 1/2 tsp சீரகம்

#👌 1/2 சோம்பு

#👌 2 பீஸ் தேங்காய் ( பத்தை ) 

#👌 2 பிரியாணி இலை

#👌 தேவையான அளவு எண்ணெய், உப்பு, தண்ணீர்.


செய்முறை : 


பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய், மல்லிதூள், மஞ்சள் தூள், மிளகு, சீரகம், சோம்பு, தேங்காய் அனைத்தையும் paste பதத்திற்க்கு நன்கு அரைத்து கொள்ள வேண்டும்.


ஒரு பாத்திரத்தில் 3 தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறிய தீயில் வைத்து பிரியாணி இலை, ஏலக்காய் ( தட்டி) போட வேண்டும், பின் நறுக்கி பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் நிறம் மாறியதும் நறுக்கி தக்காளியை சேர்த்து வதக்கவும் தக்காளி நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா paste - டில் பாதி போட்டு அதனுடன் சுத்தம் செய்து வைத்துள்ள காளானையும் சேர்த்து கிளறி 2 நிமிடம்  சிறு தீயில் வேக விடவும்.

 2 நிமிடத்திற்க்கு பிறகு மீதமுள்ள மசாலா paste- டை அதில் சேர்த்து தேவைான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். காளான் நன்கு வெந்து மேலே எண்ணெய் எழும்பி வந்ததும் கருவேப்பிலையை தூவி இறக்கி பரிமாறலாம்.


இந்த காளான் gravy இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்திர்க்கும் ஏற்றதாகும்.


புதன், 5 ஜனவரி, 2022

சுலபமான முருங்கைக்காய் குழம்பு

 தேவையான பொருட்கள்: 


👉 # எண்ணெய் தேவையான அளவு

👉 # 15 சின்ன வெங்காயம் 

👉 # 2 சிறிதாக நறுக்கி தக்காளி

👉 3 முருங்கைக்காய்

👉 1/2 cup தேங்காய்

👉 1 tsp மிளகாய் தூள்

👉 1/2 tsp மஞ்சள் தூள்

👉 1 tsp சீரகம்

👉 1/2 tsp கடுகு

👉 1/2 tsp உளுந்து

👉 கருவேப்பிலை

👉 தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்


செய்முறை:

 

மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகம் தேங்காய் சின்ன வெங்காயம் கொஞ்சம் உப்பு சிறிளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்


ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து வெடித்து முடியும் வேளையில் கருவேப்பிலை சேர்த்து பின் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும் முருங்கைக்காய் வதங்கி வெந்ததும் நறுக்கி தக்காளியை சேர்த்து வதக்கிய 2 நிமிடத்தில் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து தேவைான அளவு உப்பு மற்றும் 1/2 cup to 1 cup தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் கொதி நிலை வரும்போது மூடி வேக விட வேண்டும் எண்ணெய் நன்கு மேலே எழும்பி வந்ததும் முருங்கைக்காய் வெந்ததா இல்லையா என்று முருங்கைக்காயை கரண்டி வைத்து அழுத்தி பார்த்து தெரிந்து கொள்ளவும் காய் வெந்ததும் குழம்பு தயார் குழம்பை இறக்கி பரிமாறலாம்.

செவ்வாய், 4 ஜனவரி, 2022

ரப்டி ( North Indian Dessert Recipe)

 தேவையான பொருட்கள்:


👉 1/2 லிட்டல் full fat milk

👉 தேவையான அளவு சர்க்கரை

👉 சிறிது பிஸ்தா பருப்பு நீட்ட நீட்டமாக நறுக்கி கொள்ளவும்

👉 1 tsp ஏலக்காய் பொடி

👉 1/2 tsp cornflower மாவு

👉 சிறிது குங்குமப்பூ

👉 சிறிது பாதாம் பருப்பு நீட்ட நீட்டமாக  நறுக்கி கொள்ளவும்


செய்முறை:

2-3 tsp பால் ஒரு கப்பில் எடுத்து அதில் 1/2 tsp cornflower மாவு சே்த்து நன்றாக கலக்கி தனியே வைத்து கொள்ளவும்.

 சிறிய தீயில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 லிட்டர் பாலை ஊற்றி சர்க்கரை, ஏலக்காய் பொடி கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்து தீயை அதிகமாக்கி பால் பொங்கி வரும் நேரம் தீயை குறைத்து பாலின்மேல் உருவாகியிருக்கும் ஆடையை பாலி சேர்க்காமல் தனியே எடுத்துக் கொள்ளவும் 1/2 லிட்டர் பால் 1/4 லிட்டருக்கும் குறைவாகும் வரை அதே போல் ஆடையை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் 1/4 லிட்டாருக்கும் குறைவாக வந்த பின் cornflower மாவு கலந்துள்ள பாலை இந்த பாலில் சேர்க்கவும் அதனுடன் பாலில் இருந்து எடுத்த ஆடையையும் சேர்த்து கலக்கி விடவும் பின் நீட்ட நீட்டமாக வெட்டியுள்ள பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான North Indian Dessert ரப்டி சுவைக்க தயாரானது.

திங்கள், 3 ஜனவரி, 2022

வெண்டைக்காய் குழம்பு

 தேவையான பொருட்கள்: 


எண்ணெய்

1/2 tsp கடுகு

1/2 tsp உளுந்து

1 tsp சோம்பு

1 வெந்தயம்

புளி தண்ணீர்

1 cup வெண்டைக்காய்

1 tsp சீரகம்

2 tsp மல்லி

2 வரமிளகாய்

1 பெரிய வெங்காயம் நறுக்கியது

1 பெரிய தக்காளி நருக்கியது

கருவேப்பிலை

1/2 cup தேங்காய்

1/4 tsp மஞ்சள் தூள்

1 1/2 tsp மல்லி தூள்

1/2 tsp மிளகாய் தூள்

தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்


செய்முறை:

 ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சீரகம் வெந்தயம் சேர்த்து வறுத்து கொள்ளவும் மல்லி சேர்க்கவும் மல்லி வருபட்டதும் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும் அனைத்தும் வறுப்பட்டதும் நறுக்கி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் தேங்காயை அதனுடன் சேர்க்கவும் 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கி சிறிது நேரம் ஆர வைத்து பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்

 ஒரு எலுமிச்சை சைஸ் புளி கரைத்துக் கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் பின் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள் மல்லி தூள் மிளாகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி 1/2 cup தண்ணீரும்  சேர்த்து கொதி வரும் நிலையில் மூடி 5 முதல் 7 நிமிடங்கள் வேக விடவும் பின் மூடியை திறந்து 10 நிமிடம் கொதி்க்கவிடவும்.

தாளிப்பிற்காக ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து வெடித்து முடியும் வேளையில் கருவேப்பிலை சேர்த்து பின் இந்த தாளிப்பை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கவும் வெண்டைக்காய் குழம்பு தயார்.


சனி, 1 ஜனவரி, 2022

காரக்குழம்பு

 தேவையான பொருட்கள்:


எண்ணெய்

1/2 tsp கடுகு

1/2 tsp வெந்தயம்

1/2 tsp சோம்பு

1/2 tsp சீரகம்

25 சின்ன வெங்காயம்

25 பல் பூண்டு

கருவேப்பிலை

1/4 tsp பெருங்காயத்தூள்

1/2 tsp மஞ்சள் தூள்

2 tsp மிளகாய்த்தூள்

4 tsp மல்லித்தூள்

2 cup புளி தண்ணீர்

தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்


செய்முறை:

பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் 1/2 tsp கடுகு சேர்த்துக்கொள்ளவும் கடுகு நல்ல வெடித்ததும் 1/2 tsp வெந்தயம் 1/2 tsp சோம்பு 1/2 tsp சீரகம் சேர்த்து கிளறவும் பின் 25 சின்ன வெங்காயமும் மற்றும் 25 பூண்டும் சேர்த்து சிறிது வதக்கி நிறம் மாறியதும் கருவேப்பலை சேர்த்து வதக்கவும் அதனுடன் 1/4tsp பெருங்காயதூள் 1/2 tsp மஞ்சள் தூள் 2 tsp மிளகாய் தூள் 4 tsp மல்லி தூள் இதோடு தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அதில் ஒரு லெமன் சைஸ் புளி கரைத்தால் போதுமானது 2 cup புளி தண்ணீர் ஊற்றி தேவைப்படுமானால் மேலும் 1cup தண்ணீர் சேர்த்து கொள்ளலாம் பின்பு நன்கு கிளறிவிட்டு மூடி கொதிக்க விடவும் எண்ணெய் மேல் வரும் வரை மூடி கொதிக்க விடவும் 5 முதல் 7 நிமிடத்தில் குழம்பு தயாராகி விடும் கொத்தமல்லி இலை தூவி இறக்கி பரிமாறலாம்.

இந்த குழம்பு இட்லி தோசை மற்றும் சாதத்திற்க்கு ஏற்ற குழம்பாக இருக்கும்.