தேவையான பொருட்கள்:
1----- பெரிய தக்காளி - 3
2----- தேங்காய்ப் பத்தை - 2
3----- புளி சிறதளவு
4----- எண்ணெய்
5----- கடுகு
6----- உளுத்தம்பருப்பு
7----- பெருங்காயம்
8----- கருவேப்பிலை
9----- மிளகாய்-4
10----- மிளகு
11----- பூண்டு
12----- சீரகம்
13----- உப்பு தேவையான அளவு
செய்முறை:
மிளகு, பாதி பூண்டு, பாதி சீரகம், மிளகாய் - 2, ஆகியவற்றை சிறிது வறுத்து எடுத்து கொள்ளவும் அதனுடன் தேங்காய்ப் பத்தை சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
புளியை கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
எடுத்த பின் அதில் தக்காளியை நன்கு பிசைந்து விட வேண்டும்.
அரைத்து வைத்திருந்தவற்றை இதில் கொட்டி கலந்து விடவும்.
பின் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை, மிளகாய் - 2, மீதமுள்ள பூண்டு, மீதமுள்ள சீரகம் ஆகியவற்றை அடுத்தடுத்து போட்டு தாளிக்க வேண்டும்.
ஒவ்வொன்றும் போட்டு வெடித்ததும் கரைத்து வைத்துள்ள ரசத்தை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து மூட வேண்டும்.
கொதி வருவதற்க்கு முன்பு சுற்றிலும் நுறை போல் இருக்கும் நிலையில் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
