தேவையான பொருட்கள் :
👉 1 கிலோ பச்சரிசி
👉 1 கிலோ புழுங்கல் அரிசி
👉 1/2 கிலோ உளுந்து
👉 1/2 tsp வெந்தயம்
👉 உப்பு தேவையான அளவு
செய்முறை :
💧 பச்சரிசி, புழுங்கல் அரிசி, உளுந்து மூன்றும் சுத்தம் செய்து (கழுவி) குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஊற வைத்து பின் வடிகட்டி அரைக்க வேண்டும்.
💧 அரைக்கும்போது வெந்தயம் மற்றும் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும் அதிகமாக சேர்த்து கொள்ள கூடாது.
💧 அரிசி அரைத்து எடுப்பதற்க்கு முன்பாக கையில் தொட்டு பார்க்கும்போது (ரவையை அரைத்தால் சிறிதாகி இருக்கும் அளவில் மாவின் பதம் இருக்க வேண்டும்)
💧 அரிசி அரைத்து முடித்ததும் உளுந்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.
💧 பின் ஒரே பாத்திரத்தில் அரிசி மாவையும் உளுந்து மாவையும் ஊற்றி மிக்ஸ் செய்து வைக்க வேண்டும்.
💧 இந்த மாவு நான்கு முதல் ஆறு மணி நேரத்திர்க்கு பிறகு பயன்படுத்த தயாரானது.
💧 வீட்டிற்க்கு பயன்படுத்தும் மாவு என்றால் அரைக்கும் போது உப்பு சேர்த்து அரைக்க கூடாது. நீங்கள் மாவை பயன்படுத்தும் போது தேவையான அளவு உப்பு சேர்த்தால் போதுமானது.
💧 கடைகளில், ஹோட்டல், ஹாஸ்டல் போன்று வியாபாரத்திற்க்கு பயன்படுத்தும் மாவாக இருந்தால் அரைக்கும் போதே உப்பு சேர்த்து அரைத்து 5 மணி நேரத்தில் பயன்படுத்தி கொள்ளலாம்.
குறிப்பு : மாவில் உப்பு சேர்த்தால் சீக்கிரத்தில் உப்பி புளித்துவிடும்.