தேவையான பொருட்கள்:
எண்ணெய்
1/2 tsp கடுகு
1/2 tsp உளுந்து
1 tsp சோம்பு
1 வெந்தயம்
புளி தண்ணீர்
1 cup வெண்டைக்காய்
1 tsp சீரகம்
2 tsp மல்லி
2 வரமிளகாய்
1 பெரிய வெங்காயம் நறுக்கியது
1 பெரிய தக்காளி நருக்கியது
கருவேப்பிலை
1/2 cup தேங்காய்
1/4 tsp மஞ்சள் தூள்
1 1/2 tsp மல்லி தூள்
1/2 tsp மிளகாய் தூள்
தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு சீரகம் வெந்தயம் சேர்த்து வறுத்து கொள்ளவும் மல்லி சேர்க்கவும் மல்லி வருபட்டதும் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வதக்கவும் அனைத்தும் வறுப்பட்டதும் நறுக்கி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின் தேங்காயை அதனுடன் சேர்க்கவும் 2 முதல் 3 நிமிடங்கள் வதக்கி சிறிது நேரம் ஆர வைத்து பின் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்
ஒரு எலுமிச்சை சைஸ் புளி கரைத்துக் கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் வெண்டைக்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும் பின் அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும் தக்காளி வதங்கியதும் மஞ்சள் தூள் மல்லி தூள் மிளாகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கிய பின் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து அதனுடன் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை ஊற்றி 1/2 cup தண்ணீரும் சேர்த்து கொதி வரும் நிலையில் மூடி 5 முதல் 7 நிமிடங்கள் வேக விடவும் பின் மூடியை திறந்து 10 நிமிடம் கொதி்க்கவிடவும்.
தாளிப்பிற்காக ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து வெடித்து முடியும் வேளையில் கருவேப்பிலை சேர்த்து பின் இந்த தாளிப்பை குழம்புடன் சேர்த்து கிளறி இறக்கவும் வெண்டைக்காய் குழம்பு தயார்.