தேவையான பொருட்கள்:
👉 1/2 லிட்டல் full fat milk
👉 தேவையான அளவு சர்க்கரை
👉 சிறிது பிஸ்தா பருப்பு நீட்ட நீட்டமாக நறுக்கி கொள்ளவும்
👉 1 tsp ஏலக்காய் பொடி
👉 1/2 tsp cornflower மாவு
👉 சிறிது குங்குமப்பூ
👉 சிறிது பாதாம் பருப்பு நீட்ட நீட்டமாக நறுக்கி கொள்ளவும்
செய்முறை:
2-3 tsp பால் ஒரு கப்பில் எடுத்து அதில் 1/2 tsp cornflower மாவு சே்த்து நன்றாக கலக்கி தனியே வைத்து கொள்ளவும்.
சிறிய தீயில் ஒரு பாத்திரத்தை வைத்து 1/2 லிட்டர் பாலை ஊற்றி சர்க்கரை, ஏலக்காய் பொடி கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்து தீயை அதிகமாக்கி பால் பொங்கி வரும் நேரம் தீயை குறைத்து பாலின்மேல் உருவாகியிருக்கும் ஆடையை பாலி சேர்க்காமல் தனியே எடுத்துக் கொள்ளவும் 1/2 லிட்டர் பால் 1/4 லிட்டருக்கும் குறைவாகும் வரை அதே போல் ஆடையை எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் 1/4 லிட்டாருக்கும் குறைவாக வந்த பின் cornflower மாவு கலந்துள்ள பாலை இந்த பாலில் சேர்க்கவும் அதனுடன் பாலில் இருந்து எடுத்த ஆடையையும் சேர்த்து கலக்கி விடவும் பின் நீட்ட நீட்டமாக வெட்டியுள்ள பாதாம் பருப்பு பிஸ்தா பருப்பு சேர்த்து கிளறி இறக்கவும். சுவையான North Indian Dessert ரப்டி சுவைக்க தயாரானது.