தேவையான பொருட்கள்:
👉 # எண்ணெய் தேவையான அளவு
👉 # 15 சின்ன வெங்காயம்
👉 # 2 சிறிதாக நறுக்கி தக்காளி
👉 # 3 முருங்கைக்காய்
👉 # 1/2 cup தேங்காய்
👉 # 1 tsp மிளகாய் தூள்
👉 # 1/2 tsp மஞ்சள் தூள்
👉 # 1 tsp சீரகம்
👉 # 1/2 tsp கடுகு
👉 # 1/2 tsp உளுந்து
👉 # கருவேப்பிலை
👉 # தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர்
செய்முறை:
மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகம் தேங்காய் சின்ன வெங்காயம் கொஞ்சம் உப்பு சிறிளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தனியே வைத்து கொள்ளவும்
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு உளுந்து சேர்த்து வெடித்து முடியும் வேளையில் கருவேப்பிலை சேர்த்து பின் முருங்கைக்காய் சேர்த்து வதக்கவும் முருங்கைக்காய் வதங்கி வெந்ததும் நறுக்கி தக்காளியை சேர்த்து வதக்கிய 2 நிமிடத்தில் அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து தேவைான அளவு உப்பு மற்றும் 1/2 cup to 1 cup தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும் கொதி நிலை வரும்போது மூடி வேக விட வேண்டும் எண்ணெய் நன்கு மேலே எழும்பி வந்ததும் முருங்கைக்காய் வெந்ததா இல்லையா என்று முருங்கைக்காயை கரண்டி வைத்து அழுத்தி பார்த்து தெரிந்து கொள்ளவும் காய் வெந்ததும் குழம்பு தயார் குழம்பை இறக்கி பரிமாறலாம்.