தேவையான பொருட்கள் :
- 👉 ஆட்டுக்கால் - 4 நன்றாக சுத்தம் செய்தது
- 👉 மஞ்சள் தூள் - 2 tsp
- 👉 சீரகம் - 1/2 tsp
- 👉 கறிவேப்பிலை
- 👉 கொத்தமல்லி இலை
- 👉 பூண்டு - 15 தட்டியது
- 👉 இஞ்சி சிறிது தட்டியது
- 👉 சின்ன வெங்காயம் - 25
- 👉 வர மிளகாய் - 3 அல்லது பச்சை மிளகாய் - 2
- 👉 எண்ணெய் - 4 tsp
- 👉 மிளகு தூள் - தேவையான அளவு
- 👉 உப்பு - தேவையான அளவு
- 👉 தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை :
சீரகம், சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை நன்கு தட்டிக் கொள்ள வேண்டும்.
பின் அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் கருவேப்பிலை, ஆட்டுக் கால், மஞ்சள் தூள், சிறதளவு உப்பு மற்றும் தட்டி வைத்துள்ளவை அனைத்தும் சேர்த்து சிறிளவு கிளறி ஆட்டுக்கால் மூழ்கும் அளவிற்க்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஸ்ட்ரீம் வந்ததும் வெயிட்டை போட்டு ஐந்து முதல் ஆறு விசில் வந்ததும் சிம்மில் வைத்து 40 - 45 நிமிடம் வேக விடவும்.
Pressure குறைந்த பின் மூடியை திறந்து அதில், உங்கள் காரத்திற்க்கு ஏற்றவாறு மிளகுத் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சூடான ஆட்டுக்கால் சூப் பரிமாற தயார்.